40 வருடமாக பல திரைப்படங்கள், சின்னத்திரை தொடர்களுக்கு டப்பிங் பேசியுள்ள ரத்னகுமார் தொடர்ந்து 8 மணி நேரம் டப்பிங் பேசி இந்தியா புக் ஆஃப் ரெக்கார்ட்ஸில் சாதனை படைத்தவர். சமீபத்தில் கொரோனா காரணமாக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். கொரோனாவிலிருந்து குணமாகி வந்த பின்னரும் சிறுநீரக பாதிப்பு உள்ளிட்ட வேறு சில உடல்நல பிரச்சினை இருந்ததாக கூறப்படுகிறது. இந்நிலையில் இன்று ரத்னகுமார் திடீரென உயிரிழந்தார். அவரது குடும்பத்தினருக்கு திரைத்துறையினர் இரங்கல் தெரிவித்து வருகின்றனர்.