நடிகை அமலாபாலுடனான விவாகரத்து குறித்து இயக்குனர் விஜய் பதில் அளித்துள்ளார்.
டைரக்டர் விஜய்க்கும், நடிகை அமலாபாலுக்கும் கடந்த சில வருடங்களுக்கு முன் காதல் மலர்ந்தது. இருவரும் 2014ஆம் ஆண்டில் திருமணம் செய்துக்கொண்டனர்.
கணவர் மற்றும் அவர் குடும்பத்தினர் விருப்பத்தை மீறி, அமலாபால் படங்களில் நடிப்பது. விஜய், அமலாபால் ஆகிய இருவருக்கும் இடையே கருத்து வேறுபாட்டை ஏற்படுத்திதாகவும், இதனால் இருவரும் விவாகரத்து செய்துக்கொள்ள முடிவு செய்திருப்பதாகவும் செய்திகள் வெளியானது.
இந்நிலையில் இதுபற்றி கருத்து தெரிவித்த இயக்குனர் விஜய் “இதுபற்றி நான் எதுவும் பேச விரும்பவில்லை. என் பெற்றோர் எடுக்கும் முடிவுக்கு நான் கட்டுப்படுவேன்” என்று கூறியுள்ளார்.