இயக்குநரை அலைக்கழித்த சங்கத் தலைவர்

வியாழன், 7 செப்டம்பர் 2017 (15:23 IST)
கதை எழுதி வந்த இயக்குநரை, வேறு மாதிரி எழுதி வாருங்கள் என போட்டு அலைக்கழித்துள்ளார் சங்கத் தலைவர்.


 

 
2005ஆம் ஆண்டு வெளியான ஃபைட் சிக்கன் படத்தில் நடித்திருந்தார் உயர நடிகரான சங்கத் தலைவர். அந்தப் படம் சூப்பர் ஹிட். அதன்பிறகு அவர் நடித்த படங்கள் எல்லாமே ஆவரேஜ், தோல்வி ரேஞ்ச் தான். அந்தப் படத்தை எடுத்த இயக்குநரும் தோல்விப் படம்தான் கொடுத்தார்.
 
எனவே, ஃபைட் சிக்கன் படத்தின் இரண்டாம் பாகத்தை எடுக்க இரண்டு வருடங்களுக்கு முன்பு பிளான் செய்தார். ஆனால், இயக்குநர் எழுதிவந்த கதை, சங்கத் தலைவருக்குப் பிடிக்கவில்லையாம். ‘வேறு மாதிரி எழுதி வாருங்கள்’ என்று சொல்லி சொல்லி, இதுவரை 5 கதைகளை மாற்றவைத்து விட்டாராம். வெளியில் சொல்ல முடியாமல் தனக்குள்ளேயே புலம்பிவரும் இயக்குநர், ஒருவழியாக விரைவில் ஷூட்டிங் போகிறார்.

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்