நடிகர் விஜய்யின் தந்தை எஸ் ஏ சந்திரசேகர் சமீபத்தில் நேர்காணல் ஒன்றில் கலந்து கொண்டு பேசினார். அப்போது விஜய் கிறிஸ்துவ மதமாற்றத்துக்கு உதவும் வகையில் செயல்படுகிறாரா என்ற கேள்வி எழுப்பப்பட்டது. அதற்கு பதிலளித்த எஸ் ஏ சி‘நான் கிறிஸ்துவ மதத்தைச் சேர்ந்தவன். அதற்காக நான் என் மதத்தை தவிர மற்ற மதங்கள் தாழ்ந்தவை என சொல்ல மாட்டேன். என்னிடம் பணியாற்றிய உதவியாளர்கள் ஒருவர் கூட கிறிஸ்துவர் கிடையாது. திறமை இருந்தால் நான் அவர்களை சேர்த்துக் கொள்வேன்.