நயன்தாரா சிறுவனுடன் லிப் டூ லிப் சர்ச்சை: இயக்குனர் பதில்

வெள்ளி, 12 ஆகஸ்ட் 2016 (15:32 IST)
திருநாள் படத்தில் பள்ளி மாணவன் ஒருவன் நயன்தாராவுக்கு உதட்டில் முத்தமிடும் காட்சி ஒன்று உள்ளது. அந்த காட்சி குறித்து படத்தின் இயக்குனர் கருத்து தெரிவித்துள்ளார்.


 

 
ராம்நாத் இயக்கத்தில் ஜீவா, நயன்தாரா நடிப்பில் வெளியான திருநாள் படம் எதிர்பார்த்த அளவுக்கு வெற்றி பெறவில்லை என்றாலும் அந்த படத்தில் இடம்பெற்ற ஒரு காட்சி மட்டும் சமூக வலைதளத்தில் பரவி அனைவராலும் விமர்சிக்கப்பட்டது.
 
படத்தில் பள்ளி சிறுவன் ஆசிரியைக்கு முத்தமிடுவது போல் காட்சி. அந்த காட்சி குறித்து இயக்குனர் ராம்நாத் கூறியுள்ளதாவது:-
 
சிறுவன் ஆசிரியைக்கு முத்தம் கொடுப்பதை சரியான முறையில் எடுத்துக் கொள்ளாத நிலையில் நாம் உள்ளோம்.
 
அந்த முத்தக் காட்சி ஒரு அப்பாவித்தனத்தை தான் காட்டுகிறது. இந்தக் காட்சியை சென்சார் போர்டும் நீக்கவில்லை. 
 
ஜாலியாக எடுக்கப்பட்ட காட்சியில் கவனம் செலுத்தாமல் மக்கள் ஏன் கிளைமாக்ஸ் சொல்லும் கருத்தை பார்க்கக் கூடாது.
 
அந்த முத்தக் காட்சி தவறு என்றால், நயன்தாரா நடித்திருக்க மாட்டார்.
 
எனக்கும் ஒரு மகள் இருக்கிறாள். அவள் பள்ளியில் தான் படிக்கிறாள். எனவே எனக்கு குழந்தைகளின் மனநிலை நன்றாக தெரியும்.
 
இவ்வாறு அவர் தெரிவித்தார்.

அந்த முத்தக் காட்சி அமைக்கப்பட்டது தவறில்லை, அது அமைக்கப்பட்ட விதம் தான் தவறு. அந்த சிறுவன நயன்தாரவின் உதட்டில் முத்தமிட்டதும், நயன்தாரா சகஜமாக எடுத்துக் கொள்வது போல் காட்சி அமைத்திருந்தால் அதை யாரும் விமர்சினம் செய்திருக்க மாட்டார்கள். ஆனால் அந்த காட்சியில் நயன்தாரா வியப்படைவது போல் அமைக்கப்பட்டது தான் அந்த முத்தத்தை தவறாக சித்தரித்தது போல் இருக்கிறது. 
 
 
வெப்துனியா செய்திகள் உடனுக்குடன்!!! உங்கள் மொபைலில்... இங்கே க்ளிக் செய்யவும்
 

வெப்துனியாவைப் படிக்கவும்