ரஜினி ஆசைப்பட்ட திருநங்கை வேடம் – கதையோடு தயாராக இருக்கும் இயக்குனர் !

சனி, 21 டிசம்பர் 2019 (14:50 IST)
திருநங்கையின் கதாபாத்திரத்தை மையப்படுத்திய கதையை கொண்டு தயார் செய்து வைத்துள்ள தாங்க தாதா87 படத்தின் இயக்குனர்  விஜய் ஸ்ரீ தெரிவித்துள்ளார்.

சமீபத்தில் மேடை ஒன்றில் பேசிய ரஜினி தனக்கு திருநங்கை வேடத்தில் நடிப்பதில் மிகுந்த ஆர்வம் இருப்பதாக கூறியிருந்தார். இந்நிலையில் அது சம்பந்தமாக கருத்து தெரிவித்திருக்கும் தாதா87 படத்தின் இயக்குனர் விஜய் ஸ்ரீ தன்னிடம் அதை போல் ஒரு கதை உள்ளதாகவும் ரஜினி சம்மதித்தால் அவரை வைத்து இயக்க தயாராக இருப்பதாகவும் கூறியுள்ளார்.

இயக்குனர் விஜய் ஸ்ரீ இதற்கு முன்னதாக நடிகர் சாருஹாசன் வைத்து தாதா87 என்ற படத்தை இயக்கி இருந்தார் .அந்த படத்திலும் திருநங்கைகளுக்கு முக்கியத்துவம் கொடுத்து கதாபாத்திரங்களை உருவாக்கியிருந்தார்.இந் நிலையில் ரஜினிக்காக உருவாக்கியுள்ள கதை பற்றி கூறிய அவர் ரஜினி திருநங்கை கதாபாத்திரம் ஏற்று நடித்தால் அது சமூகத்தில் திருநங்கைகள் பற்றிய விழிப்புணர்வு ஏற்பட உறுதுணையாக இருக்கும் என தெரிவித்துள்ளார்.

 

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்