மூடர்கூடம் சென்ராயன் கதாபாத்திரத்தில் பசங்க பாண்டியராஜா? இயக்குனர் நவீனின் திட்டம்!

திங்கள், 12 செப்டம்பர் 2022 (15:10 IST)
மூடர்கூடம் படத்தில் இயக்குனர் நவீன் சென்ராயன் கதாபாத்திரத்தில் இயக்குனர் பாண்டிராஜைதான் நடிக்க வைக்க திட்டமிருந்தாராம்.

கடந்த 2013ஆம் ஆண்டு ஓவியா நடித்த 'மூடர் கூடம்' என்ற படத்தை இயக்கிய இயக்குனர் நவீன். இந்த படம் விமர்சன ரீதியாக நல்ல வரவேற்பைப் பெற்றது. அதிலும் குறிப்பாக சென்ராயனின் கதாபாத்திரம் நல்ல வரவேற்பைப் பெற்றது. அதன் பின்னர் அவருக்கு நல்ல கதாபாத்திரங்கள் கிடைக்க வழிவகுத்தது.

இந்நிலையில் அந்த கதாபாத்திரத்தில் முதலில் இயக்குனர் பாண்டிராஜைதான் நடிக்கவைக்க முடிவு செய்திருந்தாராம் நவீன். ஆனால் பாண்டிராஜ் நடிப்பதில் விருப்பம் இல்லை என்று சொல்லி அவர்தான் சென்ராயனை நடிக்க வைக்க பரிந்துரை செய்தாராம். இதை இயக்குனர் பாண்டிராஜ் சமீபத்தில் அளித்த நேர்காணலில் தெரிவித்துள்ளார்.

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்