இந்த நிலையில், தற்போது இவரது குடும்பத்தில் சோகமான சம்பவம் நடந்துள்ளது. ரஞ்சித்தின் தந்தை பாண்டுரங்கன் உடல்நலக் குறைவு காரணமாக இன்று காலமானார். 63 வயதாகும் இவர் கடந்த சில மாதங்களாகவே உடல்நிலை குறைவால் அவதிப்பட்டு வந்த நிலையில் அப்பலோ மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்தார். ஆனால் இன்று காலை 2 மணியளவில் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார்.