இந்நிலையில் வெங்கடேசன் அவர்களது நல்லடக்கம் அடையாரில் உள்ள கே.வி.ஆனந்தின் வீட்டில் இன்று மாலை நடைபெற உள்ளது. அவருக்கு அனுஷ்யா என்ற மனைவியும், கே.வி.ஆனந்த், கமல் மற்றும் ஸ்ரீதர் உள்ளிட்ட 3 மகன்களும் உள்ளனர்.
தற்போது கே.வி.ஆனந்த் இயக்கத்தில் விஜய் சேதுபதி-மடோனா செபாஸ்டியன் நடிப்பில் உருவாகி இருக்கும் `கவண்' படம் வருகிற 31-ஆம் தேதி ரிலீசாக உள்ள நிலையில், அவரது தந்தையின் மறைவு அவருக்கு பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. வெங்கடேசன் மறைவுக்கு தமிழ் திரையுலகினர் தங்களது ஆழ்ந்த இரங்கலை தெரிவித்து வருகின்றனர்.