லெஜண்ட் சரவணன் நடிக்கும் படத்தை இயக்குகிறேனா? இயக்குனர் துரை செந்தில்குமார் அளித்த பதில்!

vinoth

வியாழன், 8 பிப்ரவரி 2024 (07:22 IST)
சரவணா ஸ்டோர் அண்ணாச்சி சரவணன் நடித்த தி லெஜன்ட் என்ற திரைப்படம் கடந்த ஆண்டு வெளியானது என்பதும் இந்த படம் ஓரளவு பாசிட்டிவ் விமர்சனங்களை பெற்றாலும் எதிர்பார்த்த அளவு வசூலை பெறவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

இந்த நிலையில் இந்த திரைப்படம் கடந்த சில மாதங்களாக ஓடிடியில் ரிலீஸ் ஆகி வரவேற்பையும் கேலி கிண்டலையும் பெற்றது. இந்நிலையில் இப்போது தன்னுடைய க்ளின் ஷேவ் கெட்டப்பை மாற்றி தாடி மீசையுடன் அடுத்த படத்துக்கு தயாராகி வருகிறார் சரவணன்.

இந்நிலையில் அவர் தன்னுடைய அடுத்தப் படத்துக்காக பல கதைகளைக் கேட்டுவருவதாக சொல்லப்பட்டது. இயக்குனர் துரை செந்தில்குமார் சொன்ன கதைக்கு சம்மதம் சொல்லியுள்ளதாக சொல்லப்படுகிறது. இப்போது சூரியை வைத்து கருடன் என்ற படத்தை இயக்கி வரும் துரை செந்தில்குமார் அந்த படத்தை முடித்த பின்னர் லெஜண்ட் சரவணன் படத்தை தொடங்குவார் என சொல்லப்படுகிறது.

இது சம்மந்தமாக பேசியுள்ள இயக்குனர் துரை. செந்தில்குமார் “படம் சம்மந்தமாக பேச்சுவார்த்தை நடத்தியது உண்மைதான். ஆனால் அவருடைய அடுத்த படம் என்னுடைய படமாக இருக்கும் என தெரியவில்லை” என மழுப்பலான பதிலை அளித்துள்ளார்.

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்