அதனை தொடர்ந்து ஆர்யா மற்றும் ஷாயிஷா நடிப்பில் காமெடி கதைக்களத்தில் வெளியான ‘கஜினிகாந்த்’ படத்தை இயக்கி இருந்தார். ஆனால், அந்த படம் ரசிகர்கள் மத்தியில் எதிர்பார்த்த அளவிற்கு வரவேற்பை பெறவில்லை. அடல்ட் படத்தை தவிர வேறு எந்த ஜானரில் படம் எடுத்தாலும் அது நமக்கு சரிபட்டுவராது என்பதை சுதாரித்துக்கொண்ட ஜெயக்குமார் தற்போது மீண்டும் இருட்டு அறையில் முரட்டு குத்து படத்தை தெலுங்கில் ரீ மேக் செய்து வருகிறார்.
காமெடி திரில்லர் பாணியில் உருவாகி வரும் இந்த படத்தின் படப்பிடிப்பு கோவாவில் நடைபெறவிருப்பதாக கூறப்படுகிறது. டி இமான் இசையமைக்கும் இப்படத்தில் ஆச்சர்யம் என்னவென்றால், கதாநாயகியே இல்லாமல் இப்படத்தை இயக்கவிருக்கிறார்களாம் . இதை கேட்டவுடன் ரசிகர்களுக்கு கொஞ்சம் ஏமாற்றமாக இருந்தாலும் படத்தில் கண்டிப்பாக ஏதேனும் ஒரு ட்விஸ்ட் இருக்கும் என நம்பப்படுகிறது. ஏனென்றால், இது சந்தோஷ் பி ஜெயக்குமாரின் படமல்லவா...!