இனி மீனவர்களுக்கு பொற்காலம் தான்: ஓவர் கான்ஃபிடெண்டில் பேசும் அமைச்சர் ஜெயகுமார்

வெள்ளி, 1 பிப்ரவரி 2019 (17:42 IST)
2019 ஆம் ஆண்டிற்கான இடைக்கால பட்ஜெட்டில் மீனவர் நலனுக்காக சில விஷயங்கள் இடம்பெற்றுள்ளதால் அமைச்சர் ஜெயகுமார் பூரித்து போயுள்ளார்.
 
2019 ஆம் ஆண்டிற்கான இடைக்கால பட்ஜெட்டை இன்று பொறுப்பு நிதி அமைச்சர் பியூஷ் கோயல் நாடாளுமன்றத்தில் தாக்கல் செய்தார். இதில் சிறுகுறு விவசாயிகள், சிறுகுறு வியாபாரிகளுக்கு ஆதரவாக அம்சங்கள் இருந்தது. தனிநபர் வருமான வரி விலக்கு உச்சவரம்பு ஆண்டுக்கு ரூ.2.5 லட்சத்திலிருந்து ரூ. 5 லட்சமாக உயர்த்தப்பட்டுள்ளது. 2 ஹெக்டேர் நிலத்திற்கு குறைவாக உள்ள விவசாயிக்கு ஆண்டுக்கு ரூ.6000 வழங்கப்படும் என்று கூறப்பட்டுள்ளது.
 
மீனவர்களின் நலனுக்காக மீன்வளத்துறைக்கு தனி அமைச்சகம் அமைக்கப்படும், கால்நடை, மீன் வளர்ப்புத் துறையில் கடனை சரியான நேரத்தில் கட்டினால் 3% வட்டி சலுகை என அறிவிப்பு வெளியாகியுள்ளது. 
 
இந்நிலையில் இதுகுறித்து பேசிய தமிழக மீன் வளத்துறை அமைச்சர் ஜெயகுமார், இந்த பட்ஜெட் மீனவர்களின் குறையை போக்கும் விதமாக அறிவிப்பை வெளியிட்டுள்ளது. இனி மீனவர்களுக்கு பொற்காலம் தான். இந்த நாள் மீனவர்களின் வாழ்க்கையில் பொன் எழுத்துக்களால் பொறிக்கப்பட வேண்டிய நாள் என அவர் கூறினார்.

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்