தொடர் தோல்விகளால் பெயரை மாற்றினாரா பிரபாஸ்? – புதிய போஸ்டரில் செய்யப்பட்ட மாற்றம்!

Prasanth Karthick

திங்கள், 15 ஜனவரி 2024 (15:41 IST)
பிரபல பேன் இந்தியா நடிகரான பிரபாஸ் தனது முந்தைய படங்களின் தோல்விகளால் தனது பெயரை நியூமராலஜி படி மாற்றி வைத்துள்ளதாக பேசிக் கொள்ளப்படுகிறது.



தெலுங்கில் ராஜமௌலி இயக்கத்தில் வெளியான பாகுபலி திரைப்படம் மூலம் பிரபலமானவர் நடிகர் பிரபாஸ். அதற்கு பிறகு பல பேன் இந்தியா பட வாய்ப்புகள் அவருக்கு குவிந்தன. ஆனால் அவர் நடித்த சாஹோ, ராதே ஷ்யாம் என அனைத்து படங்களும் தோல்வியை தழுவின. சலார் மட்டும் ஓரளவு வெற்றிகரமாக ஓடியது. ஆனாலும் எதிர்பார்த்த வசூலை தரவில்லை என கூறப்படுகிறது.

இந்நிலையில் தனது அடுத்த பேன் இந்தியா படமான ‘கல்கி 2898 ஏ.டி’ என்ற படத்தில் நடித்து வருகிறார். கமல்ஹாசன், அமிதாப்பச்சன், தீபிகா படுகோனே என பலர் நடிக்கும் இந்த படம் பிரபாஸுக்கு வெற்றி படமாக அமையுமா என்பது குறித்த கேள்விகளும் இருந்து வருகின்றன.

இந்நிலையில் இன்று பொங்கலில் கல்கி 2898 ஏ.டி படத்தின் கேரக்டர் போஸ்டர் வெளியாகியுள்ளது. அதில் பிரபாஸ் கைலியை தூக்கி கட்டிக் கொண்டு லோக்கல் ஆளாக வருகிறார். அவரது கதாப்பாத்திர பெயர் ராஜாசாப் என்று உள்ளது. அதில் வழக்கமாக ஆங்கிலத்தில் PRABHAS என குறிப்பிடுவதற்கு பதிலாக PRABHASS என்று குறிப்பிடப்பட்டிருந்தது. பெயரின் கடைசியில் கூடுதலாக சேர்க்கப்பட்டுள்ள ‘எஸ்’ நியூமராலஜிப்படி பிரபாஸ் வைத்துக் கொண்டுள்ளதாகவும், முந்தைய படங்களை போல இந்த படமும் தோல்வியை தழுவி விடாமல் இருக்க இந்த மாற்றம் என்றும் சினிமா வட்டாரத்தில் பேசிக்கொள்ளப்படுகிறது.

Edit by Prasanth.K

#TheRajaSaab It is…

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்