துருவ் விக்ரம் இயக்கி நடித்துள்ள சுயாதீன ஆல்பம் ‘மனசே’ வெளியானது!

வெள்ளி, 23 செப்டம்பர் 2022 (09:41 IST)
துருவ் விக்ரம் சமீபத்தில் தன்னுடைய யுட்யூப் சேனலை தொடங்கினார்.

நடிகர் துருவ் விக்ரம் தனது இரண்டாவது படமான மஹான் படத்தை நடித்து முடித்துள்ள நிலையில் அடுத்த படம் பற்றிய அறிவிப்பு இன்னும் வெளியாகவில்லை. அடுத்ததாக அவர் மாரி செல்வராஜ் இயக்கத்தில் நீலம் புரொடக்‌ஷன்ஸ் நிறுவனத்துக்காக ஒரு படத்தில் நடிக்க இருந்தார். ஆனால் மாரி செல்வராஜ் உதயநிதி ஸ்டாலின் படத்தை இயக்கி வருவதால் துருவ் விக்ரம் படம் தள்ளிவைக்கப்பட்டுள்ளது.

இந்நிலையில் துருவ் சமீபத்தில் தன்னுடைய யுடியூப் சேனலை ஆரம்பித்து அதில் தனது சிறுவயது ஆசைகள் மற்றும் கனவுகள் பற்றி பேசியுள்ளார். இந்த வீடியோ தற்போது இணையத்தில் வைரலாகியுள்ளது. அதில் தான் இயக்கி, எழுதி நடித்துள்ள மனசே என்ற சுயாதீன ஆல்பத்தினை முதல் வீடியோவாக வெளியிட்டுள்ளார்.
 

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்