அந்த நிகழ்ச்சியில் மாணவி ஒருவர் “கிரிக்கெட்டில் உங்கள் ஆதர்ஸம் யார்?” என்று கேட்க அதற்கு தோனி சச்சின்தான் என்று பதிலளித்துள்ளார். மேலும் “எப்போதுமே என் இதயத்தில் சச்சினை போல விளையாடதான் நான் நினைத்தேன். ஆனால் அது கடினமானதுதான் என்பதால் நான் அந்த முடிவில் இருந்து விலகிக் கொண்டேன்” எனக் கூறியுள்ளார்.