கவின், லாஸ்லியாவிடம் சொன்ன அந்த எக்ஸ் லவ்வர் ப்ரியா பவானி ஷங்கரா?

வெள்ளி, 30 ஆகஸ்ட் 2019 (14:33 IST)
காதல் மன்னன் கவின் சமீபத்தில் பிக்பாஸ் வீட்டில் லாஸ்லியாவிடம் தனது முன்னாள் காதலி குறித்து பேசினார்.  
 
முதலில் நான்கு பெண் போட்டியாளர்களுடன் கடலைபோட்ட கவின், அதன் பின்னர் சாக்ஷியுடன் நெருக்கமாக பழகினார். இருவரும் திருமண பேச்சுவரை சென்றுவிட்டனர். ஆனாலும் கவினுக்கும் லாஸ்லியாவுடன் இடையேயான நெருக்கம் சாக்‌ஷி வீட்டைவிட்டு வெளியேறியதும் அதிகரித்துள்ளது. 
இந்த காதல் பிக்பாஸ் வீட்டை விட்டு வெளியே சென்றாலும் நீடிக்கும் என்றே கருதப்படுகிறது. இந்நிலையில் சமீபத்தில் தனக்கு ஒரு நடிகை மீது காதல் இருந்ததாகவும், ஆனால் பிக்பாஸ் வீட்டிற்கு வருவதற்கு முன் அந்த காதல் முறிந்துவிட்டதாகவும் லாஸ்லியாவிடம் கவின் கூறியுள்ளார். 
இது பலருக்கு அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. தற்போது அந்த நடிகை பிரியா பவானி சங்கர் என்ற தகவலும் சமூக வலைத்தளங்களில் பரவி வருகிறது. மேலும் இருவரின் புகைப்படங்களும், சில சேட்களும் வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. 

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்