பலத்த எதிர்பார்ப்புகளுக்கு நெட்பிளிக்ஸில் ஜூலை 22 ஆம் தேதி நேரடியாக வெளியானது தி கிரே மேன். ஆனால் ரசிகர்களை திருப்திப் படுத்தவில்லை. மிக மோசமான விமர்சனங்களைப் பெற்றது. இந்தியாவில் தனுஷுக்காக படத்தை எதிர்பார்த்த ரசிகர்களுக்கு “மை செக்ஸி தமிழ் பிரண்ட்” என்ற வசனம்தான் மிஞ்சியது. வாம்மா மின்னல் போல வந்து போனார் தனுஷ். இப்படி மோசமான விமர்சனங்களைப் பெற்றாலும், நெட்பிளிக்ஸ் தளத்தில் அதிக பார்வையாளர்களால் இந்த படம் பார்க்கப்பட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
இந்நிலையில் இந்த படத்தின் இரண்டாம் பாகம் உருவாக உள்ளதாக தகவல்கள் வெளியாகி வருகின்றன. அதை உறுதிப்படுத்தும் விதமாக தனுஷ் “தி கிரே மேன் உலகம் விரிவடைகிறது. லோன் வொல்ஃப் தயார். நீங்கள் தயாரா?” என தனது சமூகவலைதளப் பக்கத்தில் தெரிவித்துள்ளார். இரண்டாவது பாகத்திலாவது தனுஷுக்கு முக்கியத்துவம் இருக்குமா என்ற கேள்வி எழுந்துள்ளது.