தனுஷ் போட்ட பக்கா ப்ளான்…

வெள்ளி, 29 செப்டம்பர் 2017 (17:23 IST)
தனுஷ் போட்ட பக்கா ப்ளானை நினைத்து ஆச்சரியப்படுகின்றனர் விஷயம் தெரிந்தவர்கள்.




 
அல்போன்ஸ் புத்ரன் இயக்கத்தில், நிவின் பாலி நடிப்பில் வெளியான மலையாளப் படம் ‘பிரேமம்’. மலையாளத்தைவிட தமிழில் அதிக வரவேற்பைப் பெற்ற இந்தப் படம், சென்னையில் மட்டும் 225 நாட்கள் ஓடியது.  2015ஆம் ஆண்டு வெளியான இந்தப் படத்தில், சாய் பல்லவி, மடோனா செபாஸ்டியன், அனுபமா பரமேஸ்வரன் என மூன்று ஹீரோயின்கள் நடித்துள்ளனர். அதில், எல்லா இளைஞர்களையும் அதிகம் கவர்ந்தவர் சாய் பல்லவி. அதற்கு அடுத்தபடியாக மடோனா செபாஸ்டியனைப் பிடித்திருந்தது.

கூர்ந்து கவனித்தால், இந்த மூன்று பேரையுமே தனுஷ் தன்னுடைய அடுத்தடுத்த படங்களில் பயன்படுத்தியது தெரியும். ‘கொடி’ படத்தில் அனுபமா பரமேஸ்வரனையும், ‘பவர் பாண்டி’ படத்தில் மடோனா செபாஸ்டியனையும் பயன்படுத்திய தனுஷ், தற்போது ‘மாரி 2’வில் சாய் பல்லவியை ஹீரோயினாக்கி இருக்கிறார். அதாவது, முதலில் சின்ன மீன்களைப் பிடித்துவிட்டு, கடைசியில் பெரிய மீனை வலையில் விழவைத்துவிட்டார்.

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்