தனுஷின் அடுத்த படத்தில் ‘வெந்து தணிந்தது காடு’ ஹீரோயின்?

திங்கள், 26 செப்டம்பர் 2022 (16:30 IST)
தனுஷின் அடுத்த படத்தில் ‘வெந்து தணிந்தது காடு’ ஹீரோயின்?
தனுஷ் தற்போது நடித்து வரும் ’கேப்டன் மில்லர்’ என்ற படத்தின் படப்பிடிப்பு விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது என்பது தெரிந்ததே 
 
இந்த படத்தை அடுத்து அவர் ’பியார் பிரேமா காதல் இயக்குனர் எலான் இயக்கத்தில் ஒரு படத்தில் நடிக்க உள்ளார். ரோமியோ பிக்சர்ஸ் தயாரிப்பில் தயாராக இருக்கும் இந்த திரைப்படத்திற்கு ஏஆர் ரஹ்மான் இசையமைக்க உள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது 
 
இந்த நிலையில் இந்த படத்தில் தனுஷ் ஜோடியாக நடிக்க சித்தி இத்னானி நடிக்க இருப்பதாகவும் கூறப்படுகிறது. இவர் வெந்து தணிந்தது காடு படத்தில் சூப்பராக நடித்ததை அடுத்து அவருக்கு தனுஷ் படத்தில் நடிக்க வாய்ப்பு கிடைத்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது 
 
இந்த படம் குறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்பு இன்னும் ஒரு சில நாட்களில் வெளியாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது
 
 

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்