தனுஷின் 'மாறன்' பட புதிய அபேட்!

சனி, 23 அக்டோபர் 2021 (23:04 IST)
நடிகர் தனுஷின் மாறன் படம் குறித்த முக்கிய அப்டேட் வெளியாகியுள்ளது.

கார்த்திக் நரேன் இயக்கத்தில் தனுஷ் நடித்து வரும் தலைப்பிடாதப்படம் D43. இந்த படத்தில் தனுஷுக்கு ஜோடியாக மாளவிகா மோகனன் நடிக்கிறார். ஜிவி பிரகாஷ் இசையமைத்துள்ளார், சத்யஜோதி பிலிம்ஸ் இந்த படத்தை தயாரித்துள்ளனர். சமீபத்தில் இந்த படத்துக்கு மாறன் என பெயர் வைக்கப்பட்டுள்ள நிலையில் படப்பிடிப்பு விறுவிறுப்பாக நடந்து வருகிறது.

இந்த படத்தின் பெரும்பாலான காட்சிகள் படமாக்கப்பட்டு விட்டன. இந்நிலையில் இப்போது இந்த படத்தை பற்றிய ஒரு தகவல் வெளியாகியுள்ளது.  வரும் பொங்கல் பண்டிகை முன்னிட்டு தனுஷின் மாறன் படம் ஓடிடி தளமான ஹாட் ஸ்டாரில் வெளியாகும் என அறிவித்துள்ளது.

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்