’மாறன்’ படத்தின் மாஸ் அறிவிப்பு: தனுஷ் ரசிகர்கள் குஷி!

வியாழன், 13 ஜனவரி 2022 (18:35 IST)
தனுஷ் நடித்த ’மாறன்’ படத்தின் மாஸ் அப்டேட் சற்றுமுன் வெளியாகி இணையதளங்களில் வைரலாகி வருகிறது. 
 
தனுஷ் நடிப்பில் கார்த்திக் நரேன் இயக்கத்தில் உருவாகியுள்ள மாறன் திரைப்படத்தின் படப்பிடிப்பு முடிவடைந்தது என்பதும் இந்த படம் விரைவில் ரிலீஸ் ஆக உள்ளதாக கூறப்படுகிறது என்பது குறிப்பிடத்தக்கது 
 
இந்த நிலையில் மாறன் படத்தின் மோஷன் போஸ்டரை நாளை மாலை 6 மணிக்கு வெளியாகும் என சற்றுமுன் படக்குழுவினர் அறிவித்துள்ளனர். இந்த அறிவிப்பு தனுஷ் ரசிகர்களுக்கு பொங்கல் விருந்தாக உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது. மேலும் இந்த படம் ஹாட்ஸ்டார் ஓடிடியில் வெளியாகும் எனவும் தயாரிப்பு நிறுவனம் உறுதி செய்துள்ளது.
 
தனுஷ் ஜோடியாக மாளவிகா மோகனன் நடித்துள்ள இந்த படத்திற்கு ஜீவி பிரகாஷ் இசையமைத்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்