நடிகர் தனுஷின் 'மாறன்' பட புதிய அப்டேட்

வியாழன், 13 ஜனவரி 2022 (16:20 IST)
கார்த்திக் நரேன் இயக்கத்தில் தனுஷ் மற்றும் மாளவிகா மோகனன் நடிக்கும் மாறன் படத்தின் புதிய அப்டேட்  வெளியாகியுள்ளன.

கார்த்திக் நரேன் இயக்கத்தில் தனுஷ் நடித்து வரும் மாறன் படத்தில் கதாநாயகியாக மாளவிகா மோகனனும், வில்லனாக சமுத்திரக்கனியும் நடிக்கின்றனர். ஜிவி பிரகாஷ் இசையமைத்துள்ளார், சத்யஜோதி பிலிம்ஸ் இந்த படத்தை தயாரித்துள்ளனர். இந்நிலையில் இந்த படத்தின் புதிய புகைப்படங்கள் இணையத்தில் வெளியாகி கவனத்தை ஈர்த்தன.

இப்படத்தில் தனுஷ் ஒரு பத்திரிக்கையாளராக நடிப்பதாகவும், அவருக்கும் அரசியல்வாதியான சமுத்திரக்கனிக்கும் இடையே ஏற்படும் மோதலும் அதனால் ஏற்படும் பிரச்சனைகளுமே கதைக்களமாம்.

இ ந் நிலையில்,  மாறன் படத்தின் பாடலசிரியர் விவேக் வரிகளில் தனுஷ் பாடிய தொடக்கப் பாடலுக்கு ஜிவி.பிரகாஷ் இச்சயமைத்துள்ளார். இப்பாடலில் தெருக்குரல் அறிவு ரேப் செய்துள்ளதாகவும் தகவல் வெளியாகிறது. இப்பாடல் விரைவில் ரிலீஸ் ஆகும் எனத் தெரிகிறது

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்