தனுஷின் ‘இட்லி கடை’ படத்தின் ஓடிடி ரிலீஸ் பற்றி வெளியான தகவல்!

புதன், 8 அக்டோபர் 2025 (10:34 IST)
தனுஷ் இயக்கத்தில் உருவான நான்காவது படமாக ‘இட்லி கடை’ கடந்த ஒன்றாம் தேதி ஆயுதபூஜை அன்று ரிலீஸானது.  தனுஷுடன் நித்யா மேனன், ஷாலினி பாண்டே, சத்யராஜ், அருண் விஜய் மற்றும் பார்த்திபன் உள்ளிட்ட பல முன்னணி நடிகர்கள் நடிக்க படத்தை டான் பிக்சர் தயாரிக்க, ஜி வி பிரகாஷ் இசையமைத்துள்ளார். ஒளிப்பதிவாளராக கிரண் கௌஷிக் பணியாற்றினார்.

குடும்ப செண்டிமெண்ட், இட்லி கடை எமோஷன், பள்ளிப் பருவ காதல், என சிம்பதி எமோஷனல் டிராமாவாக உருவாகியுள்ள ‘இட்லி கடை’ திரைப்படம் கலவையான விமர்சனங்களையே பெற்று வருகிறது. சமீபத்தில் தமிழ்நாட்டில் நடந்த துயர சம்பவம் மற்றும் அது சார்ந்த அரசியல் சர்ச்சைகளால் இந்த படத்துக்கு பெரியளவில் ஓப்பனிங் கிடைக்கவில்லை என்றுதான் சொல்லவேண்டும். மேலும் திரையரங்கில் வெளியாகியுள்ள சீரியல் என்றும் ட்ரோல் செய்யப்பட்டது.

காந்தாரா படத்தின் இமாலய வெற்றியும் ‘இட்லி கடை’ படத்தின் வசூலைப் பாதித்தது. இந்நிலையில் அக்டோபர் 29 ஆம் தேதி நெட்பிளிக்ஸ் தளத்தில் ஸ்ட்ரீம் ஆகவுள்ளதாக சொல்லப்படுகிறது.

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்