தனுஷின் ‘மாரி 2’ படத்தில் வில்லனாக நடித்தவர் டொவினோ தாமஸ். இவர் இன்று ஒரு மலையாள படத்தின் படப்பிடிப்பில் இருந்தார். ’’கள’’ படத்தின் படப்பிடிப்பின்போது திடீரென ஏற்பட்ட எதிர்பாராத விபத்து காரணமாக டொவினோவுக்கு வயிற்றில் படுகாயம் ஏற்பட்ட நிலையில் ரத்த வெள்ளத்தில் துடித்து கொண்டிருந்த டொவினோவை படக்குழுவினர் மருத்துவமனையில் அனுமதித்தனர்.