தனுஷ்-ஏ.ஆர்.ரஹ்மான் இணைந்த படத்தின் ரிலீஸ் தேதி அறிவிப்பு!

வெள்ளி, 19 பிப்ரவரி 2021 (21:40 IST)
தனுஷ் மற்றும் ஏஆர் ரஹ்மான்  இணைந்த திரைப்படத்தின் ரிலீஸ் தேதி சற்றுமுன் அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது 
 
தனுஷ் நடிப்பில் ஏஆர் ரஹ்மான் இசையில் ஆனந்த் எல்.ராய் அவர்கள் இயக்கி வந்த பாலிவுட் திரைப்படம் ’அட்ராங்கிரே’. இந்த படத்தின் படப்பிடிப்பு முடிவடைந்து தற்போது போஸ்ட் புரொடக்ஷன் பணிகள் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது 
 
தனுசுடன் இந்த படத்தில் அக்ஷய்குமார் மற்றும் சாரா அலி கான் முக்கிய வேடங்களில் நடித்திருக்கிறார்கள் என்பது குறிப்பிடத்தக்கது. இந்த நிலையில் இந்த படம் வரும் ஆகஸ்ட் மாதம் ஆறாம் தேதி ரிலீசாகும் என படக்குழுவினர் அதிகாரபூர்வமாக அறிவித்துள்ளது அடுத்து இதுகுறித்து தனது டுவிட்டரில் தனுஷ் பதிவு செய்துள்ளார் 
 
இந்த படம் ஆகஸ்ட் 6ஆம் தேதி திரையரங்குகளில் ரிலீஸாகும் என்று அவர் அறிவித்துள்ளார். ஏற்கனவே தனுஷின் கர்ணன் திரைப்படம் ஏப்ரல் 9ஆம் தேதி ரிலீஸாகும் என அறிவிக்கப்பட்டுள்ளது என்பது தெரிந்ததே
 
 

6th august 2021 @aanandlrai and @arrahman’s #AtrangiRe THEATRICAL RELEASE pic.twitter.com/6BoRNsJimh

— Dhanush (@dhanushkraja) February 19, 2021

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்