இந்த படத்தை வேல்ஸ் இண்டர்நேஷனல் நிறுவனம் தயாரிக்கிறது. இந்த படம் கடந்த ஆண்டே அறிவிக்கப்பட்டும் தொடங்குவதில் தாமதம் ஆனது. இந்நிலையில் ஜூலை 11 ஆம் தேதி பூஜையோடு படப்பிடிப்பு தொடங்கியது. சென்னையில் சிலக் காட்சிகள் அரங்கம் அமைக்கப்பட்டு படமாக்கப்பட்டு பின்னர் முக்கியமானக் காட்சிகள் ராமநாதபுரத்தில் படமாக்கப்பட்டன.
தற்காலிகமாக இந்த படத்துக்கு தனுஷ் 54 என தலைப்பு வைக்கப்பட்டுள்ளது. கதாநாயகியாக மமிதா பைஜு நடிக்க, ஜி வி பிரகாஷ்குமார் இசையமைக்கிறார். இந்த படம் பற்றிப் பேசியுள்ள தயாரிப்பாளர் ஐசரி கணேஷ் படப்பிடிப்பு முடிந்து பின்தயாரிப்புப் பணிகள் நடந்து வருவதாக தெரிவித்துள்ளார். இந்த படம் அடுத்த ஆண்டு தொடக்கத்தில் ரிலீஸாகலாம் என சொல்லப்படுகிறது.