மின்னல் வேகத்தில் படப்பிடிப்பை நடத்தி முடிக்கும் தனுஷ்!

சனி, 19 ஆகஸ்ட் 2023 (08:19 IST)
கேப்டன் மில்லர் படத்தின் ஷூட்டிங்கை முடித்துள்ள தனுஷ் அடுத்து தனது 50 ஆவது படத்தை தானே இயக்கி வருகிறார். இந்த படத்தை சன் பிக்சர்ஸ் நிறுவனம் தயாரிக்க, ஏ ஆர் ரஹ்மான் இசையமைக்கிறார்.

இந்த படத்தில் தனுஷோடு எஸ்ஜே சூர்யா, காளிதாஸ் ஜெயராம், திரிஷா, துஷாரா விஜயன், சந்தீப் கிஷன், அமலா பால் மற்றும் செல்வராகவன் உள்ளிட்டோர் நடித்து வருவதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.  

கடந்த மாதம் இந்த படத்தின் படப்பிடிப்பு தொடங்கிய நிலையில் இப்போது விறுவிறுப்பாக சென்னையில் உள்ள ஒரு ஸ்டுடியோவில் படப்பிடிப்பு நடந்து வருகிறது. இந்நிலையில் படத்தின் ஷூட்டிங்கை அக்டோபர் மாதத்துக்குள் முடித்துவிட்டு அடுத்து சேகர் கமுலா இயக்கும் படத்தில் நடிக்க செல்ல உள்ளாராம் தனுஷ்.

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்