துல்கர் சல்மானுக்கு ஜோடியான தன்ஷிகா

செவ்வாய், 25 ஏப்ரல் 2017 (13:10 IST)
‘கபாலி’யின் டாம் பாய் கேரக்டரில் நடித்து புகழ்பெற்ற நடிகை தன்ஷிகா, அடுத்ததாக துல்கர் சல்மானுக்கு ஜோடியாக  நடிக்கிறார்.

 
 
தமிழ் மற்றும் மலையாளம் என ஒரே நேரத்தில் இரண்டு மொழிகளில் இந்தப் படம் உருவாகிறது. ‘டேவிட்’ படத்தை  இயக்கிய பிஜோய் நம்பியார் இந்தப் படத்தை இயக்குகிறார். படத்தைத் தயாரிப்பதும் அவரே. ஏற்கெனவே இரண்டு ஷெட்யூல்  முடிந்துவிட்ட நிலையில், விறுவிறுப்பாக படம் தயாராகிக் கொண்டிருக்கிறது. 
 
தமிழுக்காக சதீஷ், ஜான் விஜய் போன்ற நடிகர்களும் இந்தப் படத்தில் நடிக்கின்றனர். துல்கர் சல்மானுக்கு ஜோடி என்பதால்  சந்தோஷத்தில் இருக்கும் தன்ஷிகா, தன்னுடைய கேரக்டர் பற்றி வாய் திறக்க மறுக்கிறார். ஆனாலும், அவர் பார்வையற்ற மாற்றுத்திறனாளியாக நடிக்கிறார் என்ற தகவல் கிடைத்திருக்கிறது.

வெப்துனியாவைப் படிக்கவும்