10 வருடங்களுக்கு பிறகு ரஜினி பட வாய்ப்பைப் பெற்ற தீபிகா படுகோன்!

வியாழன், 22 ஜூலை 2021 (09:39 IST)
ரஜினியின் அடுத்த படத்தில் நாயகியாக நடிக்க தீபிகா படுகோன் ஒப்பந்தம் செய்யப்பட்டுள்ளதாக சொல்லப்படுகிறது.

சூப்பர் ஸ்டார் ரஜினியின் அடுத்த படத்தை ஏஜிஎஸ் நிறுவனம் தயாரிக்கும் என்று ஊடகங்களில் செய்திகள் வெளியான நிலையில் தற்போது அடுத்து ரஜினியின் அடுத்த படத்தையும் சன் பிக்சர்ஸ் நிறுவனம் தயாரிக்க இருப்பதாக செய்திகள் வெளியாகி உள்ளது. தற்போது ரஜினி நடித்து வரும் அண்ணாத்த படத்தை தயாரித்து வரும் சன் பிக்சர்ஸ் நிறுவனத்திற்கு இந்த படம் எதிர்பார்த்த வியாபாரம் ஆகவில்லை என்று தெரிவித்துள்ளதாம். கொரோனா வைரஸ் ஊரடங்கு மற்றும் படப்பிடிப்பு தாமதம் காரணமாக ஏற்பட்ட பட்ஜெட் உயர்வு ஆகியவை காரணமாக வழக்கமான ரஜினி படத்திற்கு கிடைக்கும் வியாபாரம் இந்த படத்துக்கு நடக்கவில்லை என்று கூறப்படுகிறது.

தயாரிப்பாளர்கள் குறித்து இந்த குழப்பம் இருக்கும் நிலையில் கதாநாயகியாக நடிக்க தீபிகா படுகோன் ஒப்பந்தம் ஆக உள்ளதாக சொல்லப்படுகிறது. ஏற்கனவே 10 ஆண்டுகளுக்கு முன்னர் ரஜினி நடிக்க ஒப்பந்தமான ராணா திரைப்படத்தில் நடிகையாக ஒப்பந்தமானவர் தீபிகா. ஆனால் ரஜினியின் உடல்நிலை காரணமாக இந்த படம் கைவிடப்பட்டது குறிப்பிடத்தக்கது.
 

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்