பாலிவுட்டில் முன்னணி நடிகையாக இருப்பவர் தீபிகா படுகோனே. இவர் ரஜினி நடித்த கோச்சடையான் படத்தின் மூலம் தமிழில் அறிமுகமானார். மேலும், இவர் ஹாலிவுட்டில் நடிகர் வின் டீசலுடன் சேர்ந்து xxx என்ற படத்தில் நடித்துள்ளார்.
இவரும் நடிகர் ரன்வீர் சிங்கும் காதலித்து வருவதாக பரவலாக கூறப்பட்டு வந்தது. பிறகு பத்மாவத் படத்தில் இருவரும் ஒன்றாக சேர்ந்து நடித்த போது அவர்களுக்கு நெருக்கம் அதிகமானதாக பேசப்படுகிறது. இவர்களும் விருது நிகழ்ச்சிகள், தொலைக்காட்சி நிகழச்சிகள் என அனைத்திற்கும் ஒன்றாக சென்று வருகின்றனர்.
இந்நிலையில், இவர்களுக்கு விரைவில் திருமணம் நடக்க போவதாகவும், திருமணத்திற்காக தீபகாவின் அம்மா, சகோதரி ஆகியோர் பெங்களுரில் நகைகள், புடவைகள் முதலியவற்றை வாங்கி வருவதாகவும் தகவல் வெளியாகியுள்ளது.