துக்ளக் பொன்விழா ஆண்டு நேற்று சென்னையில் கொண்டாடப்பட்டது. அதில் துக்ளக் தற்போதைய ஆசிரியர் குருமூர்த்தி, ரஜினிகாந்த் மற்றும் துணைக் குடியரசுத் தலைவர் வெங்கய்யா நாயுடு ஆகியோர் கலந்து கொண்டனர். இந்த நிகழ்வில் கலந்து கொண்ட ரஜினிகாந்த் பேசியது சர்ச்சைகளைக் கிளப்பியது.
ஆனால் அதற்கு முன்னதாகப் பேசியதாக குருமூர்த்தி பேசியது கவனத்தில் கொள்ளப்படாமல் போனது. அவரது பேச்சில் ‘இந்தியாவில் முழுமையான இந்து மாநிலம் என்றால் அது தமிழ்நாடுதான். தமிழக இந்துக்கள் அரசியல் ரீதியாக இந்துக்களாக இருப்பதில்லை. தமிழகத்தில் இந்து எதிர்ப்பு மனநிலை இருப்பதாகச் சொல்லப்படுவதை நான் ஏற்கவில்லை. தமிழக அரசியல் கட்சிகளுக்கு மரியாதை குறைந்துள்ளது. காசு கொடுக்காமல் அவர்களுக்குக் கூட்டம் கூடுவதில்லை. சோ எதையும் வெளிப்படையாகச் செய்வார். நான் எதையும் வெளிப்படையாகச் செய்ய மாட்டேன். அதனால் வரும் சட்டமன்றத் தேர்தல் கூட்டணி அமைப்பதில் பங்கு வகிப்பேனா என்பது பற்றி இங்கு சொல்ல மாட்டேன்’ என பேசியுள்ளார்.