’தர்பார்’ சென்சார், ரன்னிங் டைம் தகவல்!

வெள்ளி, 3 ஜனவரி 2020 (16:52 IST)
சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடிப்பில், இயக்குநர் ஏஆர் முருகதாஸ் இயக்கியுள்ள திரைப்படம் ‘தர்பார்’. இந்த படம் வரும் 9ஆம் தேதி ரிலீஸ் செய்ய அனைத்து ஏற்பாடுகளும் தயாராக உள்ளது. குறிப்பாக அமெரிக்காவில் 8ஆம் தேதியே பிரிமியர் காட்சிகள் திரையிடப்படவுள்ளது உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது 
 
இந்த நிலையில் இந்த படத்தை சற்று முன்னர் சென்சார் அதிகாரிகள் பார்த்து ‘UA' சான்றிதழ் அளித்து படக்குழுவினர்களை பாராட்டியதாகவும் கூறப்படுகிறது. மேலும் இந்த படத்தின் ரன்னிங் டைம் இரண்டு மணி நேரம் 39 நிமிடங்கள் என சென்சார் சான்றிதழில் குறிப்பிடப்பட்டுள்ளது 
 
ஒரு ஆக்சன் படத்திற்கு தேவையான சரியான ரன்னிங் டைம் என்பதால் இந்த படத்தின் வெற்றி இப்போதே உறுதி செய்யப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது.  ‘தர்பார்’ திரைப்படம் சென்சார் சான்றிதழை பெற்று விட்டதை அடுத்து இந்த படம் உலகம் முழுவதும் 9ஆம் தேதி ரிலீஸாவது உறுதி செய்யப்பட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது. ரஜினி ரசிகர்கள் இப்படத்தை வரவேற்க இப்போதே தயாராகிவிட்டனர் என்பது சமூக வலைதளங்களில் பதிவாகி வரும் கமெண்ட்டுக்களில் இருந்து தெரியவருகிறது

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்