கவின் நடிப்பில் இயக்குனர் கணேஷ் கே பாபு இயக்கத்தில் வெளியான டாடா திரைப்படம் மிகப்பெரிய வெற்றியைப் பெற்றது. இந்த படத்தில் கவினுக்கு ஜோடியாக பீஸ்ட் படத்தில் நடித்து கவனம் பெற்ற நடிகைகளில் ஒருவரன அபர்ணாதாஸ் நடித்திருந்தார். படம் வெற்றி பெற்றதை அடுத்து அவரின் அடுத்த படம் மீதான எதிர்பார்ப்பு அதிகமாகியுள்ளது.
இந்நிலையில் கணேஷ் கே பாபு இப்போது சிவகார்த்திகேயனை சந்தித்துள்ள புகைப்படம் இணையத்தில் வைரலாகி வருகிறது. சிவகார்த்திகேயனுக்கு அவர் ஒரு கதை சொல்லியுள்ளதாகவும், அந்த கதையில் இருவரும் இணைந்து பணியாற்ற உள்ளதாகவும் சொல்லப்படுகிறது.