சிவி குமாரின் ‘ஜாங்கோ’ ரிலீஸ் தேதி அறிவிப்பு!

வெள்ளி, 29 அக்டோபர் 2021 (20:59 IST)
சிவி குமாரின் ‘ஜாங்கோ’ ரிலீஸ் தேதி அறிவிப்பு!
பிரபல தயாரிப்பாளர் மற்றும் இயக்குனர் சிவி குமார் தயாரித்துள்ள ‘ஜாங்கோ’ என்ற திரைப்படத்தின் ரிலீஸ் தேதி சற்றுமுன்னர் அறிவிக்கப்பட்டுள்ளது
 
திருக்குமரன் என்டர்டெயின்மென்ட் நிறுவனத்தின் சிவி குமார் ‘ஜாங்கோ’ என்ற திரைப்படத்தை தயாரித்து வந்தார் என்பதும் அறிவியல் தொழில்நுட்ப கதையம்சம் கொண்ட இந்த படம் மிகப்பெரிய எதிர்பார்ப்பை ஏற்படுத்தி இருந்தது என்பதும் குறிப்பிடத்தக்கது 
 
இந்த நிலையில் இந்த படத்தின் தமிழக ரிலீஸ் உரிமையை சக்தி பிலிம் பேக்டரி என்ற நிறுவனம் பெற்றுள்ளதாக அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது. மேலும் இந்த படம் வரும் நவம்பர் 19ஆம் தேதி வெளியாகும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. இதனை அடுத்து இந்த படத்தின் புரமோஷன் பணிகள் விரைவில் நடைபெற உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது
 
இந்த படத்தை மனோ கார்த்திகேயன் என்பவர் இயக்கியுள்ளார் என்பதும் ஜிப்ரான் இசையமைத்துள்ளார் என்பதும் குறிப்பிடத்தக்கது.
 
 

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்