வெங்கட்பிரபுவின் ‘கஸ்டடி’ : அமேசான் ரிலீஸ் தேதி அறிவிப்பு..!

புதன், 7 ஜூன் 2023 (12:59 IST)
வெங்கட் பிரபு இயக்கத்தில் நாக சைதன்யா நடிப்பில் உருவான ‘கஸ்டடி’ என்ற திரைப்படம் கடந்த மே 12ஆம் தேதி திரையரங்குகளில் வெளியானது. இந்த படம் தமிழ் தெலுங்கு ஆகிய இரு மொழிகளிலும் எதிர்பார்த்த வரவேற்பை பெறவில்லை என்பதும் இந்த படம் வசூல் அளவில் தோல்வி படம் என்றே கூறப்பட்டது. 
 
இந்த நிலையில் ‘கஸ்டடி’  திரைப்படம் அமேசான் ப்ரைம் ஓடிடியில் ஜூன் 9ஆம் தேதி அதாவது வரும் வெள்ளிக்கிழமை வெளியாக உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. தமிழ் தெலுங்கு கன்னடம் மலையாளம் ஆகிய நான்கு மொழிகளில் அமேசான் பிரைமில் இந்த படம் வெளியாக உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது. திரையரங்குகளில் வரவேற்பை பெறாத இந்த படம் ஓடிடியில் வரவேற்பை பெறுமா என்பதை பொறுத்திருந்து பார்ப்போம்
 
நாக சைதன்யா காவல்துறை அதிகாரியாக நடித்துள்ள இந்த படத்தில் கீர்த்தி ஷெட்டி நாயகியாக நடித்துள்ளார். மேலும் இந்த படத்தில் அரவிந்த்சாமி, ராதிகா, சரத்குமார், சம்பத்ராஜ், பிரேம்ஜி, பிரியாமணி, வெண்ணிலா கிஷோர் உட்பட பலர் நடித்துள்ளனர்.
 
இசைஞானி இளையராஜா மற்றும் யுவன் சங்கர் ராஜா இருவரும் இசையமைத்துள்ள  இந்த படத்தை ஸ்ரீநிவாசா சில்வர் ஸ்கிரீன் நிறுவனம் தயாரித்துள்ளது.
 
Edited by Siva

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்