பாலிவுட்டில் ஹிட் அடித்த பிங்க் படத்தின் தமிழ் ரீமேக்கில் தற்போது அஜீத் நடித்துவருகிறர். இப்படத்தை சதுரங்க வேட்டை மற்றும் தீரன் அதிகாரம் ஒன்று ஆகிய படங்களை இயக்கிய வினோத் இயக்கும் இப்படத்தின் டைட்டில் நேர்கொண்ட பார்வை என வைக்கப்பட்டுள்ளது. போனி கபூர் தயாரிக்கும் இந்த படத்திற்கு யுவன் ஷங்கர் ராஜா இசையமைக்கிறார்.
இப்படத்தில் அஜித்துக்கு ஜோடியாக பாலிவுட் நடிகை வித்யா பாலன் நடிக்கிறார். ரங்கராஜ் பாண்டே, டெல்லி கணேஷ், ஷ்ரத்தா ஸ்ரீநாத், ஆதிக் ரவிச்சந்திரன் உள்ளிட்ட நட்சத்திரங்கள் முக்கிய வேடங்களில் நடித்துள்ளனர்.