தெறி, மெர்சல் திரைப்படங்களை தொடர்ந்து விஜய் – அட்லீ கூட்டணியில் மூன்றாவதாக உருவாகியிருக்கும் திரைப்படம் பிகில். இந்த படத்தின் ட்ரெய்லர் சமீபத்தில் வெளியாகி உலகளவில் ட்ரெண்ட் ஆனது. பாலிவுட், ஹாலிவுட் என அனைத்து பிரபலங்களும் பிகில் ட்ரெய்லருக்கு வாழ்த்துகளை தெரிவித்துள்ளனர்.
இந்நிலையில் பிகில் படத்தின் கதை தன்னுடையது என உதவி இயக்குனர் ஒருவர் கோர்ட்டில் மனு அளித்தார். அதன் மீதான விசாரணை முடிந்த நிலையில் தேதி குறிப்பிடாமல் தீர்ப்பை ஒத்தி வைத்துள்ளது நீதிமன்றம். பிகில் படத்திற்கு சென்சார் சான்றிதழ் கிடைக்காத பிரச்சினை ஒருபக்கம் போய்க்கொண்டிருக்க சமீபத்தில்தான் யூஏ சான்று வழங்கப்பட்டது.