அஜித் பட பாடல்களுக்குத் தடை – நீதிமன்றத்தில் வழக்கு !

செவ்வாய், 7 மே 2019 (09:08 IST)
வில்லன், வாலி உள்ளிட்ட சில அஜித் படங்களின் பாடல்களை எலக்ட்ரானிக் மீடியாக்களில் ஒளிபரப்பத் தடை விதிக்கப்பட்டுள்ளது.

பே- ஷோர் ரெக்கார்ட்ஸ் எனும் நிறுவனம் சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு ஒன்றைத் தாக்கல் செய்துள்ளது. அதில் அஜித் நடித்த வாலி, சிட்டிசன், வில்லன் உள்ளிட்ட 17 படங்களின் பாடல்களை சோனி மியுசிக் நிறுவனத்திற்குத் தடை விதிக்கவேண்டும் என கூறியுள்ளது.

இதுதொடர்பான மனுவில் ‘அஜித் நடித்துள்ள சில படங்களின் ஆடியோ உரிமையை அதன் தயாரிப்பாளரிடம் இருந்து வாங்கி வைத்துள்ளோம். ஆனால் அதை சோனி நிறுவனம் யூட்யூப், திங் மியுசிக் போன்றவற்றில் பதிவிட்டு உள்ளது. இது காப்புரிமை சட்டத்தை மீறிய செயலாகும். எனவே சோனி மியுசிக் நிறுவனம் அந்தப் பாடல்களை ஒளிப்பரப்ப தடை விதிக்கவேண்டும்’ எனக் கோரியுள்ளது.

இந்த வழக்கை விசாரித்த நீதிமன்றம்  குறிப்பிட்ட அந்த 17 படங்களின் பாடல்களை ஒளிப்பரப்ப சோனி நிறுவனத்துக்குத் தடை விதித்துள்ளது.

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்