யோகிபாபு படத்தின் சர்ச்சை....விளக்கம் அளித்த இயக்குநர்

சனி, 17 ஏப்ரல் 2021 (23:39 IST)
மடோன் அஸ்வின் இயக்கத்தில் நடிகர் யோகிபாபு நடிப்பில் வெளியான மண்டேலா படத்தைப் படம் குறித்து எழுந்த விமர்சனத்திற்கு இயக்குநர் விளக்கமளித்துள்ளார்.

சமீபத்தில் ஹாட்ஸ்டார் ஓடிடியில் வெளியான திரைப்படம் ‘மண்டேலா’ என்பதும் யோகி பாபு முக்கிய வேடத்தில் நடித்திருந்த இந்த படத்தில் நாயகியாக ஷீலா ராஜ்குமார் நாயகியாக நடித்து இருந்தார்.

 
இந்த படம் ஓடிடியில் ரிலீஸ் ஆன நிலையில் இந்த படத்திற்கு மிகப்பெரிய வரவேற்பு கிடைத்தது. மிகச்சரியாக தேர்தல் நேரத்தில் வந்துள்ள இந்த படம் தேர்தல் சம்பந்தப்பட்ட கதை என்பதால் ரசிகர்கள் ரசித்தார்கள்.

இந்த படத்தைப் பார்த்த ரசிகர்கள் திரையுலக பிரபலங்களும் தங்களுடைய பாராட்டுக்களையும் வாழ்த்துக்களையும் படக்குழுவினர்களுக்கு தெரிவித்து வருகின்றனர். இந்த நிலையில்  இயக்குநர் மடோன் அஸ்வின் இப்படம் குறித்து எழுந்த விமர்சனத்திற்கு பதிலளிக்கையில், இப்படத்தில் ஒரு நபர் மொத்த ஊரையே ஒன்று கூட்டி, தங்களின் ஓட்டினால் எப்படி எல்லாவற்றையும் மாற்றுகிறான் என்பதைத்தான் கதையாக சொல்லியிருக்கிறோம். இதில் யாரையும் குறைசொல்லும்படி படம் பண்ணப்படவில்லை எனக் குறிப்பிட்டுள்ளார்.

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்