மண்டேலா திரைப்படத்தை தடை செய்யவேண்டும்…. முடிதிருத்தும் கலைஞர்கள் சங்கம் வலியுறுத்தல்!

சனி, 10 ஏப்ரல் 2021 (15:39 IST)
யோகி பாபு நடிப்பில் கடந்த 4 ஆம் தேதி விஜய் தொலைக்காட்சியில் வெளியான மண்டேலா திரைப்படத்தை தடை செய்யவேண்டும் என முடிதிருத்தும் கலைஞர்கள் நலச்சங்கம் வலியுறுத்தியுள்ளது.

பிரபல இயக்குனர் பாலாஜி மோகன் புதிதாக ஓபன் விண்டோ எனும் தயாரிப்பு நிறுவனத்தின் மூலம் மண்டேலா எனும் புதிய படத்தைத் தயாரித்துள்ளார். இந்த படத்துக்கான பைனான்ஸை ஒய்நாட் ஸ்டூடியோஸ் நிறுவனர் சசிகாந்த் செய்துள்ளார். இந்தப்படத்தை புதுமுக இயக்குனர் மடோன் அஷ்வின் இயக்கியுள்ளார். பிரதானக் கதாபாத்திரமான மண்டேலா பாத்திரத்தில் யோகி பாபு நடித்துள்ளார். படப்பிடிப்பு முடிந்துள்ள இந்த திரைப்படம் விரைவில் விஜய் தொலைக்காட்சியில் நேரடியாக ஏப்ரல் 4 ஆம் தேதியும், 5 ஆம் தேதி முதல் நெட்பிளிக்ஸ் தளத்திலும் வெளியாகி கவனத்தைப் பெற்றுள்ளது.

இந்நிலையில் இந்த படத்தில் முடிதிருத்தும் கலைஞனாக நடித்துள்ள யோகி பாபு கதாபாத்திரம் முடிதிருத்தும் கலைஞர்களை இழிவு செய்யும் விதமாக உருவாக்கப்பட்டுள்ளக் குற்றச்சாட்டு எழுந்துள்ளது., அந்தத் திரைப்படத்தை வெளியிட்ட தனியார் தொலைக்காட்சி நிறுவனம், தயாரிப்பு நிறுவனம் ஒய் நாட் ஸ்டூடியோஸ், படத்தின் இயக்குநர் மடோனா அஸ்வின் மற்றும் நடிகர் யோகிபாபு ஆகியோர் மீது வழக்குப்பதிவு செய்து நடவடிக்கை எடுக்க வேண்டும்  என்று சென்னை காவல் ஆணையரிடம் புகார் அளித்துள்ளனர். மேலும் படத்தை ஒளிபரப்ப நிரந்தர தடை விதிக்க வேண்டும் என்றும் கூறியுள்ளனர். 

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்