அமரன் படம் கமர்சியல் படமாக உருவாகியுள்ளதாக இந்த டீசரில் தெரிந்தது.
அமரன் பட டீசரில் சிவகார்த்திகேயன் பேசிய ஒரு தகாத வார்த்தை சர்ச்சையாகியுள்ளது.
இதுகுறித்து, இப்படம் ராணுவ மேஜரை பெருமைப்படுத்தும் வகையில், எடுக்கப்பட்டுள்ளதால், இதற்கான ஷூட்டிங் அதற்கு சம்பந்தப்பட்ட இடங்களில் நடந்து வருகிறது.
ஆனால், இப்பட டீசரில் சிவகார்த்திகேயன் பேசிய தகாத வார்த்தைக்கு ராணுவ அதிகாரிகள் வருத்தம் தெரிவித்து, கமலுக்கு மெயில் அனுப்பியுள்ளனர். இது சிவகார்த்திகேயனுக்கும் போயுள்ளது.
இப்படத்தின் டீசரை பல லட்சம் பேர் பார்த்துள்ளனர். இந்த நிலையில், இப்படம் சென்சாருக்கு செல்லும்போது, குறிப்பிட்ட காட்சிகள் மியூட் அல்லது கட் செய்யப்படும் என தெரிகிறது.