அடுத்தடுத்து லீக் ஆன வேட்டையன் ஷூட்டிங் வீடியோக்கள்… படக்குழு அதிர்ச்சி!

புதன், 3 ஜனவரி 2024 (08:59 IST)
ஜெயிலர் படத்துக்குப் பிறகு ரஜினிகாந்த் த செ ஞானவேல் இயக்கும் வேட்டையன் படத்தில் இப்போது நடித்து வருகிறார். இந்த படத்தின் பூஜை சில மாதங்களுக்கு முன்னர் சென்னையில் நடந்தது. முதல் கட்ட ஷூட்டிங் திருவனந்தபுரத்தில் தொடங்கியது. படத்தில் துஷாரா விஜயன், ரித்திகா சிங், மஞ்சு வாரியர், ராணா டகுபதி, பஹத் பாசில் மற்றும் அமிதாப் பச்சன் ஆகியோர் நடிக்கின்றனர்.

படத்தின் முதல் கட்ட ஷூட்டிங் திருவனந்தபுரம் மற்றும் திருநெல்வேலியில் நடக்க, இரண்டாம் கட்ட ஷூட்டிங் மும்பையில் படமாக்கப்பட்டது. அங்கே அமிதாப் பச்சன் நடிக்கும் காட்சிகளை படமாக்கியுள்ளது படக்குழு. அதையடுத்து இப்போது சென்னையில் இந்த படத்தின்  பெரும்பாலான காட்சிகள் படமாக்கப்பட்டு வருகின்றன.

இந்நிலையில் இந்த படத்தில் ரஜினி மற்றும் பஹத் பாசில் நடிக்கும் காட்சி ஒன்றின் வீடியோ இணையத்தில் லீக் ஆனது. இதையடுத்து படக்குழுவினர் ஷூட்டிங் ஸ்பாட்டில் கட்டுப்பாடுகளை அதிகமாக்கிய நிலையில் இப்போது மீண்டும் வெளிப்புற தளத்தில் ரஜினி மற்றும் பஹத் பாசில் நடிக்கும் காட்சியின் ஷூட்டிங் ஸ்பாட் வீடியோ வெளியாகி படக்குழுவினரை அதிர்ச்சிக்குள்ளாக்கியுள்ளது.

வேட்டையன்
தலைவர்....... #Thalaivar #vettaiyan pic.twitter.com/QIi7n7XGNu

— Desingh ✪ (@VijayDesingh) December 31, 2023

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்