5 கிராமி விருதுகளை வென்ற பாடகர்... குவியும் வாழ்த்து
திங்கள், 4 ஏப்ரல் 2022 (18:02 IST)
இந்த ஆண்டு நடைபெற்ற கிராமி விருது வழங்கும் விழாவில் 5 விருதுகளை வென்று ஜான் பேட்டிஸ் சாதனை படைத்துள்ளார்.
இசை உலகில் மிக உட்சபட்ச விருதாக கருத்தப்படும் விருது கிராமி விருது . இந்த ஆண்டிற்கான (2022) கிராமி விருதுகள் வழங்கும் நிகழ்ச்சி அமெரிக்காவில் உள்ள லாஸ் வேகாஸில் நடந்தது.
இந்த நிகழ்ச்சியை பிரபல நடிகர் டிரெவர் நோவா தொகுத்து வழங்கினார்.
இந்த விழாவில் பிரபல பாடகர் மற்றும் பாடலாசிரியரான ஜான் பேட்டிஸ் வீ ஆர் என்ற ஆல்படம் பாடலுக்காக 5 கிராமி விருதுகள் பெற்றார்.
இந்த விழாவில் ஏ .ஆர் ரஹ்மான் அவரது மகன் அமீனுடன் கலந்துகொண்டார்.