கல்வி செயற்பாட்டளரும், கிழக்கு பதிப்பகத்தின் நிறுவனராகவும் இருந்து வருபவர் பத்ரி சேஷாத்ரி. சமீபத்தில் இவர் அண்ணா குறித்து பேசிய கருத்துகள் சமூக வலைதளங்களில் கடும் சர்ச்சையை சந்தித்துள்ளது. பத்ரி சேஷாத்ரி தமிழ்நாடு அரசின் தமிழ் இணையக்கல்வி ஆலோசனை குழுவில் இடம்பெற்றிருந்தார்.
இந்திய அளவில் பேசு பொருளான இந்த விவகாரத்தில் தற்போது, பிரபல இயக்குனர் நவீன் தன் டுவிட்டர் பக்கத்தில், பகுத்தறிவு பெற்ற தமிழர்கள் அவரை பேரறிஞர் என்பர். மூடர்கள் இடியட் என்பர். பைத்தியங்கள் மீது கருணை அவசியம். ஆனால் சிகிச்சை அதனினும் அவசியம்.