அஜித்தின் பரத் சுப்பிரமணியம் கேரக்டர் எங்கிருந்து வந்தது தெரியுமா?

சனி, 10 ஆகஸ்ட் 2019 (22:10 IST)
அஜித் நடித்த 'நேர்கொண்ட பார்வை' திரைப்படம் கடந்த வியாழன் அன்று வெளியாகி வெற்றி நடை போட்டு வருகிறது. உலகம் முழுவதும் இந்த படத்திற்கு பாராட்டுக்கள் குவிந்து வரும் நிலையில் அஜித்தின் நடிப்பை வெறுப்பவர்கள் கூட பாராட்டி வருகின்றனர். குறிப்பாக ஒரு மாஸ் நடிகர் மாஸ் காட்சிகள் இல்லாத ஒரு கருத்து கூறும் படக்கதையில், அதுவும் பெண்களை மையமாகக் கொண்டுள்ள ஒரு கதையில் துணிந்து நடித்து இருப்பது பாராட்டுக்குரியது என்றும் அஜித்தை பின்பற்றி மற்ற மாஸ் நடிகர்களும் இதே போன்ற கதையம்சத்தில் நடிக்க வேண்டும் என்றும் பல விமர்சகர்கள் கருத்து கூறி வருகின்றனர் 
 
இந்த நிலையில் அஜித் இந்த படத்தில் பரத் சுப்பிரமணியன் என்ற கேரக்டரில் நடித்துள்ளார். இந்த கேரக்டர் எங்கிருந்து எடுக்கப்பட்டது என்பது குறித்த தகவல் தற்போது படக்குழுவினர்கள் இருந்து கசிந்துள்ளது. பெண்கள் விடுதலைக்காக போராடியவர் என்ற பட்டியலில் எடுத்தால் அதில் முதல் பெயர் நமது சுப்ரமணிய பாரதி அவர்களுக்குத்தான் இருக்கும். பெண்கள் குறித்து பல புரட்சிகரமான கருத்துக்களை தனது பாடல்கள் மூலம் எழுதி விழிப்புணர்வை ஏற்படுத்த செய்தவர் சுப்பிரமணிய பாரதியார். அவருடைய பெயர்தான் பரத் சுப்பிரமணியன் என மாற்றி அமைக்கப்பட்டு அஜித் கேரக்டராக உருவாக்கப்பட்டுள்ளதாக படக்குழுவினர் தெரிவித்துள்ளனர்.
 
பெண்களின் பிரச்சனை குறித்த கதை அம்சம் கொண்ட இந்த படத்திற்கு பாரதியாரின் பெயரை அஜித்தின் கேரக்டர் வைத்துள்ளது பொருத்தமாக ஏற்பதாகவும் கருத்துக்கள் தெரிவிக்கப்பட்டு வருகின்றன

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்