மோகன்லால் படம் வசூல் சாதனை

புதன், 19 அக்டோபர் 2016 (17:36 IST)
மோகன்லால் நடித்த ஒப்பம் திரைப்படம் வசூல் சாதனை படைத்துள்ளது. 

 
ப்ரியதர்ஷன் இயக்கத்தில் மோகன்லால் நடித்த படம், ஒப்பம். இதில் கண் தெரியாதவராக மோகன்லால் நடித்திரந்தார். இன்வெஸ்டிகேஷன் த்ரில்லர் படமான இது நாற்பது தினங்களை கடந்து கேரளாவில் ஓடிக் கொண்டிருக்கிறது. 
 
மலையாளப் படங்களில் இதுவரை மூன்று படங்களே 50 கோடிகளைத் தாண்டி வசூலித்துள்ளன. நான்காவதாக ஒப்பம் திரைப்படமும் ஐம்பது கோடிகளை கடந்துள்ளது. இதுவொரு சாதனை. 
 
மோகன்லாலின் புதிய படம், புலிமுருகன் 100 கோடிகளை வசூலிக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. 

வெப்துனியாவைப் படிக்கவும்