விக்ரமிற்கு வில்லனாகும் இர்பான் பதான் - கோப்ரா படம் குறித்து சுவாரஸ்ய பதிவு!

திங்கள், 27 ஜூலை 2020 (14:19 IST)
விக்ரம் நடித்து வரும் 58வது திரைப்படமான ’கோப்ரா’ படத்தின் படப்பிடிப்பு கடந்த சில மாதங்களாக விறுவிறுப்பாக நடைபெற்று வந்தது. இந்த படத்தின் படப்பிடிப்பை கூடிய விரைவில் முடித்து விட்டு அடுத்ததாக விக்ரம் ’பொன்னியின் செல்வன்’ படப்பிடிப்பிற்கு செல்ல திட்டமிட்டுள்ளார்

அஜய்ஞானமுத்து இயக்கத்தில் ஏஆர் ரஹ்மான் இசையில் உருவாகி வரும் இந்தப் படத்தில் விக்ரம் ஜோடியாக ஸ்ரீநிதிஷெட்டி நடித்து வருகிறார். மேலும் பிரபல கிரிக்கெட் வீரர் இர்பான் பதான் உள்பட பலர் நடித்து வரும் இந்த படத்தை 7ஸ்கிரீன் ஸ்டூடியோஸ் நிறுவனம் தயாரித்து வருகிறது.

கடந்த சில மாதங்களுக்கு முன்னர் இப்படத்தின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர் 7 விதமான வெவ்வேறு விக்ரம் கொண்ட அட்டகாசமான போஸ்டர் வெளியாகி அமோக வரவேற்பை பெற்றிருந்தது. அதுமட்டுமின்றி இப்படத்தில் 20 விதமான கெட்டப்புகளில் விக்ரம் நடிக்கிறாராம்.

இந்நிலையில் தற்ப்போது இப்படத்தில் முக்கிய ரோலில் நடிக்கும் கிரிக்கெட் வீரர் இர்ஃபான் பதான் கொல்கத்தாவில் படப்பிடிப்பின் போது எடுத்த புகைப்படத்தை பகிர்ந்து இன்டர்போல் அதிகாரியாக நடித்திருக்கும் தனது கேரக்டர் பற்றியும் பதிவு செய்துள்ளார். இதனை கண்ட ரசிகர்கள் சியான் விக்ரமுடன் உங்களை திரையில் காண மிகுந்த ஆவலுடன் இருப்பதாக கூறி வருகின்றனர்.

What an Interpol officer doing in Kolkata?? #shoot #movie #cobra #throwback @AjayGnanamuthu pic.twitter.com/0pucSw5VLH

— Irfan Pathan (@IrfanPathan) July 26, 2020

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்