இதுவரை விக்ரம் நடித்த படங்களிலேயே அதிக பட்ஜெட் படமாக கோப்ரா உருவாகியுள்ளது. கிட்டத்தட்ட மூன்று ஆண்டுகளாக படப்பிடிப்பு நடந்துவந்த கோப்ரா கடந்த மாதம் முடிவுற்றது. இதையடுத்து படக்குழுவினர் கேக் வெட்டி கொண்டாடிய புகைப்படம் இணையத்தில் வெளியானது. இப்போது ரிலீஸ்க்கான வேலைகள் மும்முரமாக நடந்து வரும் நிலையில் ஆகஸ்ட் மாதம் 11 ஆம் தேதி ரிலீஸாகும் என தகவல்கள் பரவி வருகின்றன.