பேட்டை தூக்கி வீசிய கிறிஸ் கெயிலுக்கு அபராதம்...! ஐபிஎல் நிர்வாகம் அதிரடி

சனி, 31 அக்டோபர் 2020 (16:16 IST)
கிறிஸ் கெயில் 99 ரன்களுக்கு அவுட் ஆனதால் சதம் அடிக்க முடியாத ஆதங்கத்தில் பேட்டை தூக்கி வீசினார். இதற்காக ஐபிஎல் நிர்வாகம் இவருக்கு 10% விதித்துள்ளது.

நேற்றைய போட்டியில் ராஜஸ்தானுக்கு எதிரான முழு திறமையைக் காட்டி 99 ரன்கள் எடுத்த கிறிஸ் கெயில் 99 ரன்களுக்கு அவுட் ஆனதால் சதம் அடிக்க முடியாத ஆதங்கத்தில் பேட்டை தூக்கி வீசினார்.

இதுகுறித்து கெயில், எனது 41 வயதில் 1000 சிக்ஸர்கள் அடித்தது ஒரு சாதனை. அதற்கு நான் நன்றி தெரிவிக்கிறேன். நான் சதம் அடிக்கவேண்டுமென நினைத்தவர்களை ஏமாற்றியவர்களிடம் நான் மன்னிப்பு கேட்டுக் கொள்கிறேன். இருப்பினும் நான்  மிஸ் செய்தேன் என்றாலும் அதை நான் சதமாகவே பார்க்கிறேன் எனத் தெரிவித்துள்ளார்.

இவர் பெட்டை தூக்கி வீசிய வீடியோ நேற்று  இணையதளங்களில் வைரல் ஆனது. பலரும் கெயிலுக்கு ஆதரவும் எதிர்ப்பும் தெரிவித்தனர்.

இந்நிலையில்,  ராஜஸ்தான் ராயல்ஸ் அணிக்கு எதிரா போட்டியில் 99 ரன்களுக்கு அவுட் ஆனதால் பேட்டை வீசிய கிறிஸ் கெயிலுக்கு அபராதம் விதிக்கப்பட்டுள்ளது. அவர் விதி மீறலில் ஈட்டுபட்டதற்காக நேற்றைய போட்டியின் சம்பளத்திலிருந்து அவருக்கு 10% அபராதம் விதிக்கப்பட்டுள்ளதாக ஐபில் நிர்வாகம் தெரிவித்துள்ளது.

ஆனால் அதே மேட்சில் ,டி-20 போட்டிகளில் 1000 சிக்ஸர்கள் அடித்த முதல் வீரர் என்ற ஒரு புதிய  சாதனை படைத்துள்ளார்.

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்