சிரஞ்சீவி நடித்துள்ள 'கைதி எண் 150' ரிலீஸ் தேதி அறிவிப்பு?

வியாழன், 8 டிசம்பர் 2016 (14:37 IST)
சிரஞ்சீவி நடிப்பில் உருவாகி வரும் 'கைதி எண் 150' படத்தை 'சங்கராந்தி' பண்டிகையை முன்னிட்டு வெளியிட படக்குழு திட்டமிட்டிருந்தது. அதன்படி, இப்படம் ஜனவரி 11 அல்லது 12 ஆகிய தேதிகளில் வெளியிடலாம் என தெலுங்கு திரையுலக வட்டாரம் தெரிவிக்கின்றன.

 
இப்படத்தின் இசையை கிறிஸ்மஸ் பண்டிகையையொட்டி வருகிற டிசம்பர் 25ஆம் தேதி வெளியடலாம் என எதிர்ப்பார்க்கப்படுகிறது. விநாயக் இயக்கத்தில் உருவாகியுள்ள இப்படத்தை சிரஞ்சீவியின் மகனும், பிரபல தெலுங்கு நடிகருமான ராம் சரண் மற்றும் லைகா நிறுவனம் இணைந்து தயாரித்துள்ளது.
 
இப்படம், தமிழில் ஏ.ஆர்.முருகதாஸ் இயக்கத்தில் இளையதளபதி விஜய் நடிப்பில் வெளியான சூப்பர்ஹிட் படமான 'கத்தி' திரைப்படத்தின் அதிகாரப்பூர்வ ரீமேக்காகும். இதில் சிரஞ்சீவிக்கு ஜோடியாக காஜல் அகர்வால், ஸ்ரேயா சரண், ராய் லக்ஷ்மி, வில்லனாக தருண் அரோரா உள்ளிட்டோர் நடித்துள்ளனர். இப்படத்துக்கு தேவி ஸ்ரீ பிரசாத் இசையமைத்துள்ளார். மேலும் சிரஞ்சீவி நீண்ட இடைவெளிக்கு பிறகு நடித்துள்ளதால் தெலுங்கு திரையுலகில் மிகுந்த எதிர்ப்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது.
 

வெப்துனியாவைப் படிக்கவும்